» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

திங்கள் 12, மார்ச் 2018 1:18:14 PM (IST)




தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உடல் உறுப்புகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

சென்னை பிரிடம் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான பயணாளிகள் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டு பயணாளிகளின் கை, கால் உடல் உறுப்புகள் அளவீடு செய்யப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் பிரதீப், ஏ .பி .சி  மஹாலட்சுமி  காலேஜ் ,. தலைவர் எ .பி .சி .வ . சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி அதிபர் வாசுகி மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, ஊன்றுகோல் காலிபர் போன்ற செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கைலாசம், சமுதாய வளர்ச்சி துறை மேலாளர் சுகந்தி செல்லத்துரை, மதுரை பிரிடம் அறக்கட்டளை மருத்துவர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

மக்கள்Mar 12, 2018 - 02:44:21 PM | Posted IP 117.2*****

வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory