» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சமுதாய வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது : மாவட்ட ஆட்சியர் பெருமிதம்
வெள்ளி 9, மார்ச் 2018 8:26:27 PM (IST)

சமுதாய வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்மையை போற்றும் திருவிழா என்ற தலைப்பில், அனைத்துத்துறை அரசு மகளிர் அலுவலர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் 8ம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் பரிசுகள் வழங்கி தெரிவித்ததாவது: ஒரு குடும்பத்தில் பெண் படித்தால், அந்த குடும்பமே படிப்பறிவு பெறும். குறிப்பாக, பெண்களின் பங்களிப்பு சமுதாயத்திற்கு அதிகமான தேவைப்படுகிறது. வான்வெளி ஆராய்ச்சி போன்ற அறிவியியல் துறைகளில் பெண்கள் பங்கு மிக முக்கியமானது.
எடுத்துக்காட்டா கல்பனா சாவ்வலா, விண்வெளிக்கு சென்று முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர்களுக்கு, அலுவலகத்திலும், வீட்டிலும் விடுமுறையின்றி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒய்வின்றி உழைக்கும் பெண்களாகிய நீங்கள், சமுதயாத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதற்கு கல்வியறிவு, பொது அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான உரிமைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் உள்ள பொறுப்புகள் குறித்து தங்களது குழந்தைகளிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற 23 வகையான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட அரசு மகளிர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளை தூத்துக்குடி விகாசா பள்ளி தலைமை ஆசிரியர் கிரிசில்டா அவர்களின் தலைமையில் 20 ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு நடத்தி கொடுத்தனர். சிறப்பு பேச்சாளராக கார்த்திகா என்பவர் கலந்து கொண்டு மகளிரின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி.ரேவதி, மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.சிந்து, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.லாவண்யா, வட்டாட்சியாகள்; ராஜ்குமார் தங்கசீலன், ராஜசெல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழையாறு புதிய தடுப்பணைக்கு தடைகோரி வழக்கு: நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 24, பிப்ரவரி 2021 5:19:57 PM (IST)

கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண் : நகராட்சி ஊழியரின் அலட்சியம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 8:32:53 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்
புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)

Parameshwari. PFeb 20, 2021 - 03:51:46 PM | Posted IP 162.1*****