» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி ஆட்சியரிடம் சுப.உதயகுமார் பரபரப்பு மனு

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 12:22:42 PM (IST)தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தான் பொறுப்பு என அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்க்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, வெளிநாடுகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு  ஏஜென்ட்டாக தான் செயல்ப டுவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். முகவரி இல்லாத சில நபர்கள் தனக்கு எதிராக சுவரொட்டி களையும் ஒட்டியுள்ளனர்.

கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் என்ற பெயரில் மாவட்டத்தில் வன்முறையை தூண்டி மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த பாஜகவினர் முயல்கின்றனர். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் பொறுப்பு. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்,தன் மீது அவதூறு பிரச்சாரம் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory