» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மருத்துவர் மீது நடவடிக்கை கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

புதன் 14, பிப்ரவரி 2018 7:46:25 PM (IST)வெள்ளக்கோவிலில் செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை கோரி நாகர்கோ விலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அரசு சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவம னையின் தலைமை மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த ஏராளமான செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory