» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் இறந்தது எப்படி ?

புதன் 14, பிப்ரவரி 2018 6:22:07 PM (IST)

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜாண் ஜேக்கப் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்றதால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் ஜேக்கப் (வயது 64), கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல், வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் ஜேக்கப் பரிதாபமாக இறந்தார்.

ஜாண் ஜேக்கப் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதனால் கிள்ளியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அவரது மகன் நிதின் சைமன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.இன்று காலை 10 மணிக்கு ஜாண்ஜேக்கப் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.இதில் ஜாண் ஜேக்கப் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்றதால் இறந்தது தெரியவந்தது. அவர் என்ன மாத்திரை தின்றதால் இறந்தார் என்பதை அறிய உடல் பாகங்களை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பவும் டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதன்பின்பு ஜாண் ஜேக்கப் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஜாண் ஜேக்கப் உடலை அவரது சொந்த ஊரான படூவூருக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.முன்னதாக ஜாண்ஜேக்கப் உடல் பிரேத பரிசோதனை நடந்த ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ரா ஜன், ஆஸ்டின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory