» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு விஜயதரணி கண்டனம்

புதன் 14, பிப்ரவரி 2018 6:09:06 PM (IST)

ஒரு முன்னாள் முதல்வரை ரவுடிகளை ஒப்பிட்டு பேசுவது பெரும் தவறு என்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது.காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி இதற்கு ஆதரவு தெரிவித்தார். சபாநாயகரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.இது காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவனும், விஜயதரணி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். விஜயதரணி மீது தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் ரவுடிகள் படத்தையும் சட்டசபையில் திறந்திருக்க வேண்டும் என்று கூறினார். இளங்கோவன் பேச்சு குறித்து விஜயதரணி கூறியதாவது,இளங்கோவனுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிடிக்காது. இதுபோல என்னையும் அவருக்கு பிடிக்காது. எனவே தான் அவர் இவ்வாறு பேசி உள்ளார். இளங்கோவன் தேவைக்கேற்ப பேசுபவர். இப்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் இளங்கோவனின் தன்மையை காட்டுகிறது. ஒரு முன்னாள் முதல்வரை, ரவுடிகளை ஒப்பிட்டு பேசுவது பெரும் தவறு. இதனை நான் கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory