» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை : எஸ்டிபிஐ வலியுறுத்தல்

புதன் 14, பிப்ரவரி 2018 2:27:25 PM (IST)



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாநில தலைவர் தெக்கலான் பாக்கவி தெரிவித்தார்.

நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாநில தலைவர் தெக்கலான் பாக்கவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டது என புலனாய்வு அதிகாரிகள் கூறிய போதும். சதிதான் காரணம் என பாஜக.,வின் ஹெச். ராஜா, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறிவருவதால் அவர்களிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும். 

ஓகி புயலில் பாதித்த குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க தவறிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ,தமிழ்நாட்டிற்க்கு  தேவையில்லாத திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டை குப்பை கிடங்காக மாற்றும் தமிழக அரசையும் அமைச்சர்களையும் வண்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory