» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட கால்நடைத்துறையில் வேலை

புதன் 14, பிப்ரவரி 2018 12:54:23 PM (IST)

குமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வு பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விகிதாச்சாரத்தை உள்ளட க்கியது. விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பி னருக்கு 35. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்த ப்பட்டோர் (முஸ்லிம்) 32. பொதுப் பிரிவினருக்கு 30 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளைக் கையாள தெரிந்திருக்க வேண்டும்.விண்ணப்பங்களை w‌w‌w.‌k​a‌n‌n‌i‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கன்னியாகுமரி, கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன், பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமோ, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, 3 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி - 629 001 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory