» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருட்டு மதுவிற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம் : இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 6:21:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மற்றும் போலி மதுவிற்பனை நடந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடை தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும் அதற்கு முன்னரும் பின்னரும் திருட்டு மதுவிற்பனை குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே நடைபெற்று வருகிறது.இதில் போலீசார் பார்களில் சோதனை செய்து திருட்டு மதுவிற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர்.

இதை தடுப்பதில் அடுத்த கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மற்றும் போலி மதுவிற்பனை நடந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதற்கான எண் 10581.இது கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் எனவும் இதில் புகாரளிப்போரின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory