» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் போதைபாெருள் கும்பல் கைது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 6:14:13 PM (IST)

மார்த்தாண்டத்தில் போதை பாெருள் கும்பல் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கலில் போதை பொருள்கடத்தியதாக  போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளாவிலிருந்து அபின் என்னும் போதை பொருளை வாங்கி விற்பதாக வந்த தகவலை அடுத்து கேரளா சென்ற போலீசார் அங்கு ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் மார்த்தா ண்டத்திலிருந்து போதை பொருட்களை வாங்கி விற்பதுதெரிய வந்தது. தொடர்ந்து இன்று காலை மார்த்தாண்டத்திற்கு போலீசார் விரைந்தனர்.

தொடர்ந்து போலீசார் தாங்கள் கைது செய்த நபர்களிடம் போதை பொருள் விற்பவரை ஒரு இடத்திற்கு வரும்படி கூறுமாறு தெரிவித்தனர்.அவர்களும் மார்த்தாண்டத்தில் ஒரு இடத்தை கூறி வர செய்யவே அங்கு சென்ற போலீசார் மறைந்திருந்து போதை பொருள் விற்க வரும் சமயத்தில் அக்கும்பலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory