» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹெல்மெட் சோதனையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் : போலீசார் மீது கல்வீச்சு!

சனி 10, பிப்ரவரி 2018 8:11:36 PM (IST)அருமனை அருகே போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் தீவிர ஹெல்மட் சோதனை நடந்து வருகிறது. இதில் அடிக்கடி போலீசார் துரத்தியும், நீளமான லத்தியை குறுக்கே நீட்டுவதாலும் போலீசார் சோதனைக்கு பயந்து வேகமாக வாகனங்களை வாகன ஓட்டிகள் திருப்புவதாலும் வாகன ஓட்டிகள் இறப்பது, படுகாயமடைவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில்குமரி மாவட்டம்  திருவட்டாறு அருமனை சாலை சந்திப்பில் போலீசார் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வாலிபர் ராஜேஷ் (25) வந்தார். போலீசார் அவரை நிறுத்தி ஹெல்மெட் சோதனை செய்தனர். உரிய ஆவனம் இருப்பதாக கூறிய அவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதில், ராஜேஷ் படுகாயம் அடைந்தார். 

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராஜேஷை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் லத்தியால் அடித்து விரட்டினர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை படம்பிடிக்க சென்ற பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை போலீசார் தாக்கியுள்ளனர்.  மக்கள் கருத்து

pothuFeb 12, 2018 - 08:52:48 PM | Posted IP 117.2*****

ஹெல்மெட் தொல்லை தங்கமுடியால ஆட்சியா ? அல்லது காட்சியா ? அரசு போலீஸ் கிட்ட சொல்லலாம்ல !

Dony FernandoFeb 10, 2018 - 11:05:58 PM | Posted IP 157.5*****

Dai police change your activities da

மக்கள்Feb 10, 2018 - 08:57:51 PM | Posted IP 157.5*****

காக்கிசட்டை போட்ட திருடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

ஞாயிறு 23, செப்டம்பர் 2018 11:25:49 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory