» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழரின் மனம் நிறைந்த தமிழர் ஆண்டாக பொங்கல் திகழட்டும் : பொன்ராதாகிருஷ்ணன் வாழ்த்து

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:38:48 AM (IST)

தமிழகமெங்கும் பாெங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தைப் பொங்கல் திருநாளின் உதயம் தமிழக விவசாயிகளின் துயரங்களை எல்லாம் துடைத்தெறியும் நன்னாளாகவும், மழை வளம் பெருகி, மண் வளம் செழித்து, பயிர் வளம் நிறைந்து தமிழரின் மனம் நிறைந்த தமிழர் ஆண்டாக இவ்வாண்டு திகழ்வதுடன்  பிரதமர்  நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்கள் நிரம்பப் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்க இத்தைத்திருநாள் வழிகாட்ட வாழ்த்தி அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory