» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்களுக்கு விரித்த வலையில் சிக்கிய மீனவர் உடல்

சனி 13, ஜனவரி 2018 2:24:59 PM (IST)

குளச்சலில் மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

குளச்சலில் இருந்து 11 மீனவர்கள்  விசைப்படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை குளச்சலில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அழுகிய நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது அறிந்து குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். பிணமாக மிதந்தவர் தங்கள் பகுதியைச் சேர்ந்தவரா? என அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இதையடுத்து குளச்சல் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் சேர்ந்து அந்த நபரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் பிணமாக மீட்கப்பட்டவர் மீனவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஒகி புயலில் மாயமான மீனவரா? அல்லது புயலுக்கு பின் கடலுக்கு சென்று மாயமான 3 குளச்சல் மீனவர்களில் ஒருவரா? என விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திருமணமாகாத வருத்தத்தில் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 11, டிசம்பர் 2018 12:12:26 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory