» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

சனி 13, ஜனவரி 2018 2:20:05 PM (IST)

பாெங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் விலைஉயர்ந்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு  தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.நேற்று பிச்சி பூ கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டது. இன்று கிலோ ரூ.850 தாக உயர்ந்துள்ளது. மல்லி பூ கிலோ ரூ.1200-க்கு விற்கப் பட்டது. இன்று கிலோ ரூ.2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.800 ஆக இருந்தது இன்று ரூ.1300-க்கு விற்கப்பட்டது. சம்மங்கி ரூ.150-க்கு விற்பனையானது. இன்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் மற்ற பூக்களும் விலை உயர்ந்துள்ளது. சிவந்தி ரூ.150, சேலம் அரலி ரூ.180, வாடாமல்லி ரூ.70, மஞ்சள் கேந்தி ரூ.30, சிவப்பு கேந்தி ரூ.50, ரோஸ் ரூ.170, கொழுந்து ரூ.100-க்கும் விற்கப்பட்டது. மேலும் பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory