» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டு முன் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு

வெள்ளி 12, ஜனவரி 2018 8:42:35 PM (IST)

இரணியல் அருகே வீட்டில் முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இரணியல் அருகே உள்ள மூலச்சன்விளை பகுதியை சேர்ந்த அமலரூபன். இவரது மகன் அஜய்(4). சம்பவத்தன்று அஜய் வீட்டிற்கு வெளியே அமர்ந்து விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவனது அழுகை சத்தம் கேட்டு தாயார் சுபிலா ஓடி வந்துள்ளார்.அப் போது குழந்தை யின் கழுத்தில் கிடந்த சுமார் இரண்டரை பவுன் தங்க செயினை காணவில்லை. 

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களும் வீட்டிற்கு முன்பிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த சிறுவர்கள் 3 பேரும் செயினை திருடி சென்றதாக சுபிலா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் ப திவு செய்து 3 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory