» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிறந்து 50 நாளான பெண் குழந்தையை கொன்ற வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்

வெள்ளி 12, ஜனவரி 2018 8:35:30 PM (IST)

பிறந்து 50 நாளான பெண் குழந்தையை கொன்ற வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்லங்கோடு மேடவிளாகம் கல்லடிதோப்பு பகுதியை சேர்ந்த நாகேந்திரன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜாண் பிரிட்டோ (35) என்பவருக்கு இடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாம். கடந்த 23.12.2012 ம் ஆண்டு அன்று நாகேந்திரனின் மனைவி சரஸ்வதி, அவரது மகளின் 50 நாளான பெண் குழந்தை அர்ஷாவை தோளில் வைத்து இருந் தார்.அப்போது ஜாண்பிரிட்டோ, நாகேந்திரனின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். பின்னர் சரஸ்வதியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அர்ஷாவை தூக்கி கீழே வீசினார். 

இதில் படுகாயம் அடைந்த சிறுமி அர்ஷா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து சரஸ்வதி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்ப திவு செய்து ஜாண் பிரிட்டோவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை குமரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந் தது.வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் ,அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றம் 452 பிரிவிற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். கொலை செய்யும் நோக்கம் இல்லாமல், தங்கள் செயலால் உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்து நடந்த குற்றம் 304(2) பிரிவிற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத் தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory