» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆளில்லா விமானம் மூலம் வெள்ள சேத தடுப்பு பணி: ஆட்சியர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

வெள்ளி 12, ஜனவரி 2018 5:38:34 PM (IST)அத்திமரப்பட்டி கிராமத்தில் உள்ள கோரம்பள்ளம் 24 கண் மறுகால் ஓடை பகுதியில் வெள்ள சேத தடுப்பிற்காக ஆளில்லா விமானம் மூலம் வெள்ளப்பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை படம் பிடிக்கும் பணியினை ஆட்சியர் என்.வெங்கடேஷ், துவக்கி வைத்தார்.

வருவாய்துறை அமைச்சர் சட்டபேரவையில் 10.07.2017-ல் அறிவித்தபடி வெள்ள சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக ஆளில்லா விமானம் மூலம் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை 3டி முறையில் படம் பிடிக்கும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன், முன்னிலையில், அத்திமரப்பட்டி கிராமத்தில் உள்ள கோரம்பள்ளம் 24 கண் மறுகால் ஓடை பகுதியில், வெள்ள சேத தடுப்பிற்காக ஆளில்லா விமானம் மூலம் வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை படம் பிடிக்கும் பணியினை இன்று துவக்கி வைத்தார்.

அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக ஆளில்லா விமானம் மூலம் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை 3னு முறையில் படம் பிடிக்கும் பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.701.60 கோடி திட்ட மதிப்பீட்டில் மாநிலம் முழுவதுமாக சுமார் 10,000 சதுரகிலோ மீட்டர் நீர் நிலைப்பகுதிகள் இத்திட்டத்தின்படி படம் பிடிக்கப்பட்டு 3 ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும். ஆளில்லா விமானம் மூலம் பிடிக்கப்படும் நிலவரைப்படங்கள் தொகுக்கப்பட்டு ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் முழு விபரங்கள் தெரிந்து வெள்ள சேத பாதிப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இத்திட்டத்தின் மூலம் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தயார் செய்யப்படும். ஆறுகள் மற்றும் நீர்;நிலைகளில் துண்டிக்கப்பட்ட வழித்தடங்களை கண்டறிந்து மீண்டும் இணைப்பதன் மூலம் வெள்ள பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும். தூரத்தினை குறைக்கும் விதமாக சாத்தியக்கூறுகள் மிக குறைந்த தூரம் உள்ள வழிப்பாதைகளில் சாலை அமைத்தல். தமிழ்நாடு மாநில பேரிடர் ரெஸ்பான்ஸ் போர்ஸ் (ளுனுசுகு) அண்ணா பல்கலைகழகத்தின் ஏரோ ஸ்பேஸ் ரிசெர்ச் சென்ட்ருடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், முதன்மை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர்தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கோரம்பள்ளம் மற்றும் வைப்பாறு வடிநில பகுதிகள் மற்றும் வெள்ளப்பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகியன மொத்தம் 209.22 சதுர கி.மீ பரப்பளவில் இப்பணியினை மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்கள். தாமிரபரணி ஆற்றின் 84 கி.மீ நீள பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் 47 கி.மீ நீள பகுதி தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளது. மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவற்றின் 4 முக்கிய கால்வாய்கள் தாமிரபரணி மற்றும் வைப்பாற்றின் கரைகள், கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடை ஆகியன இத்திட்டத்தின் கீழ் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

இப்பகுதிகளில் வெள்ளபாதிப்புக்கு வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் குளங்களில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புகுள்ளாகும் பகுதிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்ட 36 இடங்களையும் படம் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். வெள்ள சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறியவும் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் வகுக்கவும் இப்பணி உதவிகரமாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரகுநாதன், சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) நெல்லைநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

முருகன்Jan 12, 2018 - 06:17:38 PM | Posted IP 61.3.*****

ரொம்ப தாமதம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory