» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 12, ஜனவரி 2018 5:19:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதம் தோறும் விவசாயிகள் கோரிக்கைதினக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

ஜனவரி 2018 மாதத்திற்கான விவசாயிகள் கோரிக்கைதினக் கூட்டம் 25.01.2018 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணிக்கு  மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.  மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் தலைமையில்  நடைபெறும்  இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நவம்பர் 2017 மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும்.  மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும்.  விவசாயிகள் திரளாக கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory