» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்திற்கு ஜன 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 12, ஜனவரி 2018 5:03:49 PM (IST)

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு வரும் 31.01.2018 அன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு 31.01.2018 (புதன்) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

31.01.2018 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2018 பிப்ரவரி திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (10.02.2018) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கும் வேலை நாளாக இருக்கும்.ஜனவரி 31 ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திங்கள் 24, செப்டம்பர் 2018 7:28:41 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory