» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீசார்

திங்கள் 1, ஜனவரி 2018 5:41:36 PM (IST)நாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் போலீசார் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

2018 புதிய ஆண்டு பிறப்பை ஒட்டி நாகர்கோவிலில் நேற்று போலீசார் வாகன சோதனை மேற்கொண்டார்.இதில் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை யும், குடிபோதை மற்றும்  வேகமாக வருபவர்களுக்கு  அப ரா தம், வழக்கு என்று இல்லாமல் அவர்களை அமர செய்து அறிவுரை வழங்கினர். நாகர்கோவிலில் வெட்டூணிமடம், வடசேரி, பறக்கை சந்திப்பு, செட்டிக்குளம் உள்பட நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. 

பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை யும், குடிபோதையில் பைக்கில் வந்தவர்களை யும் பிடித்து அமர வைத்து மேலும் அதிக வெளிச்சம், ஓவர் லோடு உள்ளிட்ட வாகனங்களை யும் மறித்து, அதன் டிரைவர் களை உட்கார வைத்து நள்ளிரவு 12 மணி பிறந்ததும் அவர் களுடன் இணைந்து போலீசார் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடி னர். பின்னர் அவர்களுக்கு இனிப்பு மற்றும் டீ வழங்கினர். வெட்டூணி ம டம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. துரை பங்கேற்று கேக் வெட்டினார். 


மக்கள் கருத்து

தமிழன்Jan 2, 2018 - 03:14:48 PM | Posted IP 117.2*****

நண்பேன்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory