» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழித்துறையில் தொடருகிறது மீனவர்கள் போராட்டம் : ரயில்கள் கிளம்பவில்லை

வியாழன் 7, டிசம்பர் 2017 6:24:50 PM (IST)

குழித்துறை ரயில் நிலையத்தில் தொடரும் மீனவர்கள் போராட்டத்தால் பல ரயில்கள் புறப்பட இயலாத நிலையில் உள்ளது.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஓக்கி புயலால் கனமழை மற்றும் புயல் காற்று வீசியதில் கன்னியாகுமரி மாவட்டமே மொத்தமாக முடங்கி யுள்ளது. இன்னும் நிறைய பகுதிகளில் தண்ணீர்,செல்போன்,உணவு வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.பல மீனவர்கள் காணாமல் போய் நிறைய பேர் இறந்து விட்டனர்..

இந்நிலையில் கடலில் மாயமான மீனவர்களை கண்டு பிடிக்க வலியுறுத்தி சுமார் 2000 மீனவர்கள் குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் குமரியிலிருந்து அவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களும் கிளம்ப முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.காலையிலிருந்து இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை அரசோ,மாவட்ட நிர்வாகமோ வரவில்லை என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory