» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியிலிருந்து காரில் புறப்பட்டார் தமிழகஆளுனர்

வியாழன் 7, டிசம்பர் 2017 6:19:49 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்குகாரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  புறப்பட்டார்.

நெல்லையிலிருந்து நேற்றிரவு கார் மூலம் கன்னியாகுமரிக்கு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார்.தாெடர்ந்து இன்று காலை  சூரிய உதயத்தை கண்டு ரசித்த அவர் தொடர்ந்து குமரியில் பிரசித்தி பெற்ற பகவதி யம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் குளச்சலில் மீனவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.இன்று மாலை ரயிலில் ஆளுனர் சென்னை செல்வதாக இருந்தது.

இந்நிலையில் குழித்துறையில் மீனவர்கள் நடத்தும் போராட்டத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பாததால்  கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காரில் புறப்பட்டார். இரவு 9 மணி க்கு மதுரை செல்லும் ஆளுநர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory