» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புயலால் இறந்தவர்களுக்கு கேரள அரசு போல் தமிழகஅரசும் உதவ வேண்டும் : பொன்னார் பேட்டி

வியாழன் 7, டிசம்பர் 2017 2:45:16 PM (IST)

ஒக்கி புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் அரசு உதவி வழங்குவதுபோல தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழக, கேரள மீனவர்கள் ஏராளமானோர் மராட்டியம், குஜராத், லட்சத்தீவு போன்ற பகுதிகளில் பத்திரமாக கரையேறி உள்ளனர். இது தொடர்பாக குஜராத், மராட்டிய அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். 

மீனவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே குமரி மாவட்ட புயல் பாதிப்பு பற்றி உள்துறை அமைச்சர் மற்றும், இணை அமைச்சரை சந்தித்து பேசினேன். இன்று கவர்னரையும் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறினேன். குமரி மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடமும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடும் சரியாக இல்லை.புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் அரசு உதவி வழங்குவதுபோல தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.ஆனால் 500 பேர் மட்டும் அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்திலும் விவசாயிகள் இணைந்திருந்தால் மத்திய அரசின் இழப்பீடும் கிடைத்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory