» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோயமுத்துார்,திருநெல்வேலியை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் தமிழக ஆளுனர் ஆய்வு

வியாழன் 7, டிசம்பர் 2017 12:37:21 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார்.

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அரசு நிகழ்ச்சிகளுக்காக கோவை,திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்லும் போது அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துதல்,ஊரின் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பல அரசியல் கட்சிகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

அவ்வகையில் இன்று கன்னியாகுமரிக்கு சென்ற ஆளுனர் அங்கு குளச்சலில் ஓகி புயலால் பாதிக்க்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது குமரி மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory