» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்சி அருகே லாரி மீது வேன் மோதி கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

வியாழன் 7, டிசம்பர் 2017 12:17:27 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 

கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு சென்றார். வேனை டிரைவர் ராகேஷ்(33) ஓட்டினார். திருச்சி வழியாக வேன் வந்துக்கொண்டிருந்தது. அதிகாலையில்  டெம்போ டிராவலர் துவரங்குறிச்சி காச மோர்னிமலை அருகில் சென்றபோது சாலையில்  நின்றிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போர்வெல் லாரியை ஓட்டுநர் கவனிக்காததால் லாரியின்  பின்புறத்தில் டெம்போ டிராவலர் வேன் பயங்கரமாக மோதியது.
  
இதில் டெம்போ டிராவலர் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை தீயணைப்புத்துறையினர், போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். சாலையில் உரிய பாதுகாப்பு விளக்கு போடாமல் லாரியை நிறுத்தியிருந்ததும், ஓட்டுநர் ராகேஷ் வேகமாக வந்ததில் கவனிக்காமல் மோதியதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory