» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னுாறு ரூபாய் வாழையை 10 ரூபாய்க்கு விற்பனை

வியாழன் 7, டிசம்பர் 2017 11:27:35 AM (IST)

ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாழைகள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் ரூ.300 க்கு விற்க வேண்டிய ஒரு குலை வாழையை ரூ.10-க்கு விற்றனர்.

ஒக்கி புயலால் குமரி மாவட்ட வாழை விவசாயிகள் சந்தித்துள்ள நஷ்டம் அவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் தோவாளை, கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் லட்சக்கணக்கில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு இருந்தது. அதிக லாபம் தரும் செவ்வாழை, ஏத்தன் வாழைகளையே விவசாயிகள் அதிகம் பயிர் செய்து இருந்தனர்.

ஒக்கி புயலால் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாழைகள் முறிந்து விழுந்து விட்டன. ஒரு ஏக்கருக்கு ஆயிரம் முதல் 1500 வரை வழைகள் பயிரிடப்பட்டு இருந்தவர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். மொத்தத்தில் பல லட்சம் ரூபாய் பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஒக்கி புயல் ஏற்படுத்தி விட்டன.

இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் புயலால் சாய்ந்த வாழை குலைகளை மினி வேன்களில் ஏற்றிச் சென்று சாலையோரங்களில் போட்டு 10ரூபாய் என மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory