» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒரு வாரத்திற்கு பின் மாவட்ட பள்ளி,கல்லுாரிகள் திறப்பு

வியாழன் 7, டிசம்பர் 2017 10:47:48 AM (IST)

ஒக்கி புயலால் 7 நாட்களாக மூடிக்கிடந்த குமரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் வழக்கம்போல காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி ஒக்கி புயல் தாக்கியது. கடந்த 29-ந்தேதி இரவு முதலே பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசியதால் மாவட்ட நிர்வாகம் 30-ந்தேதி குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.அதன் பிறகு ஒக்கி புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மாவட்டம் இருளில் மூழ்கியது. எங்குமே மின் இணைப்பு இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை 5 மற்றும் 6-ந்தேதிக்கும் நீட்டித்தது.

பள்ளி, கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இதனால் குமரி மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்தது.ஒக்கி புயலால் 7 நாட்களாக மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் வழக்கம்போல காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory