» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான மீனவர்களை மீட்க கோரி ரயில் மறியல்

வியாழன் 7, டிசம்பர் 2017 10:35:40 AM (IST)

குமரி கடலில் மாயமான மீனவர்களை கண்டு பிடிக்க வலியுறுத்தி மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த குழித்துறை ரயில் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஓக்கி புயலால் கனமழை மற்றும் புயல் காற்று வீசியதில் கன்னியாகுமரி மாவட்டமே மொத்தமாக முடங்கியுள்ளது.இன்னும் நிறைய பகுதிகளில் தண்ணீர்,செல்போன்,உணவு வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.பல மீனவர்கள் காணாமல் போய் நிறைய பேர் இறந்து விட்டனர்..

இந்நிலையில் கடலில் மாயமான மீனவர்களை கண்டு பிடிக்க வலியுறுத்தி மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த குழித்துறை ரயில் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.இதில் சின்னத்துறை, கொல்லங்கோடு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஊர்வலமாக குழித்துறை ரயில் நிலையத்துக்கு மீனவர்கள் சென்றுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory