» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது ? : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 6, டிசம்பர் 2017 8:08:58 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் நாளை டிச 7 ம் தேதி முதல் வழக்கம் போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்சஜ்ஜன்சிங் ரா.சவான், தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,ஓகி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைத்திடும் விதமாக துரித நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. பள்ளி வளாகத்தில் வீழ்ந்து ள்ள மரங்களை இரண்டு தினங்களில் முழுமையாக அப்புறப்படுத்தி மாணா க்கர்களின் கல்வி நலன் பாதிக்காத அளவில் பள்ளியினை சீர் செய்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை, புயல் காரணமாக காணாமல் போன மற்றும் சேதமடைந்த பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், சீருடை, நோட்டுபுத்தகங்கள் அனைத்தும் அந்தந்த தலைமையாசிரியர் வழி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அனைத்து பொருட்களும் புதிதாக மாணவர்களுக்கு வழங்கப்பட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். மேலும் அனைத்து பள்ளிகளும் டிச 7 ம் தேதி முதல் வழக்கம் போல் நடைபெறும்.மழை, புயல் சேதம் காரணமாக இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி சான்றிதழ்கள் சேதம் அடைந்திருப்பின் அது குறித்த விவரங்களை உரிய அலுவலரிடம் சான்று பெற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கான இரண்டாம்படி நகல் பெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory