» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இறந்த மீனவர்கள் உடலை கொண்டு செல்ல ஏற்பாடு : சிபிஎம் தலைவர்களிடம் பினராயி விஜயன் உறுதி

புதன் 6, டிசம்பர் 2017 7:26:59 PM (IST)ஓக்கி புயலில் சிக்கி உயிர் இழந்த தூத்துக்குடி மீனவர்களின் உடல்களை விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பிரனாயி விஜயனை இறந்த மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும், சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட  தலைவர்களும் சந்தித்தனர்.  இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கேரள முதல்வர் உறுதியளித்தார்.

தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த ஜீடு அவரது மகன் பாரத் , ரவீந்திரன் ஜோசப், கினிஸ்டன்,  ஜெகன், ஆகிய 6 பேரும் கடலில்  மீன் பிடித்து கொண்டிருந்த போது ஓக்கி புயலில் சிக்கியதில் ஜெகன் தவிர அனைவரும் இறந்துள்ளனர். ஜெகன் உயிர் பிழைத்து திருவந்தனபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த தகவல் அறிந்தவுடன் உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும்,  உறவினர்களும், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கடந்த 2ம் தேதி சென்றனர். அங்கு உயிர் இழந்தவர்க ளை பார்த்துள்ளனர். போதிய அடையாளம் தெரியாததால் மரபணு சோதனை இறந்தவர்களின் வாரிசுதார்களிடம்  செய்யப்பட்டு திருவனந்தபுரம் ராஜீவ்கா ந்தி தடயவியல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதன் முடிவுகள் 2 நாட்களில் தெரிய வரும்.

இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருக்கும் இறந்த மீனவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும், உறவினர்களும் தங்குவதற்கும் உணவு ஏற்பாடும் தமிழக அரசோ, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ எதுவும் செய்யவில்லை.  3 நாட்கள் சாலையோரம் தங்கியிருந்துள்ளனர்.  இச்சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவின் கவனத்திற்கு தெரிய வந்தது. தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்  உரிய வசதிகள் செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் , கேரள மாநில தலைவர்களுடன் பேசி நாயனார் சேவை விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விடுதி கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டக்குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தங்குவதற்கும் உணவு ஏற்பாடும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், சிஐடியு தமிழ் மாநில செயலாளர் ரசல், மாநகர செயலாளர் ராஜா, மற்றும் மாணவர்சங்க மாநகர ஒருங்கிணைப்பாளர் ஜாய்சன் ஆகியோர் திருவனந்தபுரம் சென்று இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் சந்தித்தனர். ஓக்கி புயலில் சிக்கி உயிர் பிழைத்த படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகனை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் மரபணு சோதனை முடிவுகளை விரைவில் ஆய்வு செய்து இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் கொடுப்பதற்கு விரைவான நடவடிக்கையில் எடுக்கவேண்டுமென வலியுறுத்துவதற்காக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்களும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினரும்  கேரள மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயனை நேரில் சந்தித்தனர். 

மேலும் மீனவர்களின் உடல்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகன ஏற்பாடுகள் செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் இறந்தவர்களின் உடல்களை விரைவில் கொடுப்பதற்கும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதற்கான உரிய ஏற்பாடுகள் செய்வதாகவும் அக்கறையுடன் உறுதியளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் திருவனந்தபுரத்திலேயே தங்கி இறந்த மீனவர்களின் உடல்கள் கிடைக்கும் வரை உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

மீனவன்Dec 8, 2017 - 11:55:22 AM | Posted IP 117.2*****

மீனவனே ஒன்றுபடு

மீனவன்Dec 8, 2017 - 11:55:21 AM | Posted IP 117.2*****

மீனவனே ஒன்றுபடு

ARUNDec 7, 2017 - 12:53:17 PM | Posted IP 27.62*****

கம்யூனிஸ்ட்களை அறிவோம் ...AVVALAVE

தமிழன்Dec 7, 2017 - 12:19:47 PM | Posted IP 5.42.*****

சட்ட மன்ற உறுப்பினர் கீதா ஜீவன் எங்கே போனார்கள். கம்யூனிஸ்ட் சகோதரர்களுக்கு நன்றி.

சாமான்யன்Dec 6, 2017 - 10:10:27 PM | Posted IP 157.5*****

மிகுந்த பாராட்டுதலுக்குரியது

ஜெட் செல்வாDec 6, 2017 - 09:31:19 PM | Posted IP 168.2*****

கேரளா முதல்வருக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory