» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

புதன் 6, டிசம்பர் 2017 12:04:04 PM (IST)



பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், 25ஆண்டு கால வழக்கிற்கு நீதி கோரியும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ராஜாஜி பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சாஹூல் ஹமீது கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், அருட்பணியாளர் சுந்தரி மைந்தன், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பார் புதுக்குடி ராஜா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பாசுல் சமீர், எஸ்டிஐ மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, மாவட்ட துணைத் தலைவர் முகம்மது அலி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதுபோல், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் காமராஜ் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேட்டை முஸ்தபா கன்டன உரையாற்றினார். தமிழ் புலிகள் கத்தார் பாலு, மற்றும் கட்சி நிர்வாகிகள் முகம்மது ரெளபிக், முகம்மது ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

spmaDec 6, 2017 - 05:32:05 PM | Posted IP 210.1*****

thumbs up

NomanDec 6, 2017 - 02:37:12 PM | Posted IP 82.19*****

adkikadi pannanum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory