» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் அம்மா திட்டம் நடைபெறும் தேதி : ஆட்சியர் சவான் அறிவிப்பு

புதன் 15, நவம்பர் 2017 1:42:06 PM (IST)

தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் நான்காம் கட்ட சிறப்பு முகாம் நவம்பர் 17 ம் தேதி  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வடசேரி கிழக்கு வருவாய் கிராமத்திற்கு மட்டும், அரசு மேல்நிலைப் பள்ளி, மனோன்ம ணியம் சுந்தரனார் தெரு, வடசேரியில் வைத்தும், கல்குளம் வட்டத்தில் கப்பியறை அ வருவாய் கிராமத்திற்கு மட்டும், புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி, செல்லாங்கோணத்தில் வைத்தும், விளவங்கோடு வட்டத்தில் கிள்ளியூர் அ வருவாய் கிராமத்திற்கு மட்டும், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, விழுந்தயம்பலத்தில் வைத்தும் காலை 10 மணியளவில்  நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்டம் நான்காம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory