» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சரிதாநாயர் தொடங்கும் நிறுவனத்துக்கு எதிராக புகார்

புதன் 15, நவம்பர் 2017 11:19:47 AM (IST)

தக்கலையில் சரிதாநாயர் தொடங்கும் நிறுவனத்துக்கு எதிராக காங்கிரசார் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு புகார் மனுவை கொடுத்துள்ளனர். பாராளுமன்ற தொகுதிக்கான இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், நகர தலைவர் ஹனுகுமார், ஜோன்ஸ் இம்மானுவேல் உள்பட நிர்வாகிகள் திரண்டு வந்து மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது,தக்கலை கொல்லன்விளை பகுதியிலும், கொல்லக்குடி முக்கு பகுதியிலும் தனியாருக்கு சொந்தமான 2 கடைகளை வாடகைக்கு எடுத்து காகித கப், காகித தட்டு தயாரிக்கும் நிறுவனம் என்று கூறி சிலரை அங்கு வேலைக்கும் அமர்த்தி உள்ளனர். அந்த நிறுவனத்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா நாயர், பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த வினு கிரிஷ் மற்றும் 20 பேர் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த நிறுவனத்தில் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை. எனவே நிறுவனம் அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டு இருக்கிறதா? என்றும் தெரியவில்லை. பொருட்கள் தயாரிப்பும் நடைபெறவில்லை. காகித கப் தயாரிப்பு நிறுவனம் எனக்கூறி ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுகிறதோ? எனவும் தெரியவில்லை.கேரள மாநிலத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் அடைக்கலத்திற்கு குமரி மாவட்டத்தை அனுமதிக்க கூடாது. எனவே அது குறித்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory