» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை

புதன் 15, நவம்பர் 2017 11:03:40 AM (IST)

அஞ்சுகிராமம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருடப்பட்டுள்ளது.

அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தாராம். அங்கு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தனர். அப்போது, அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்து 500 பணம் ஆகியவை திருட்டுபோய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory