» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் விரைவில் நேருவுக்கு வெண்கல சிலை கிழக்கு மாவட்ட காங்.,அறிவிப்பு

புதன் 15, நவம்பர் 2017 10:22:35 AM (IST)

முன்னாள் பிரதமர் நேருவுக்கு ரூ. 5லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை நாகர்கோவிலில்  அமைக்கப்படும் என குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், நேரு பிறந்த தின விழா,   மாவட்ட அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு தலைமை வகித்து, நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியது: நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பில்  முழு உருவ வெண்கலச் சிலை விரைவில் நிறுவப்படும்.  மேலும்,  வரும் டிசம்பர் மாதம்  நடைபெற உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்படும் என்றார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory