» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் உள்ளிட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது

புதன் 15, நவம்பர் 2017 10:17:27 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளை அருகேயுள்ள திருத்துவபுரத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி லைலாகுமாரி(42). இவர் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இது தொடர்பாக வடசேரி போலீஸார் இவரை கைது செய்து மதுரையில் பெண்கள் சிறப்பு சிறையில் அடைத்தனர். இதேபோல், களியக்காவிளையை அடுத்த  மீனக்கல் அருகேயுள்ள இருத்தாவூர் பகுதியைச் சேர்ந்த பிஜீ(32) தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தாராம். 

இவரை ஆரல்வாய்மொழி  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவ்விருவரையும்  குண்டர் சட்டத்தில் கைது செய்ய   மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி துரை பரிந்துரை செய்ததன்பேரில், ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி,  2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory