» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செட்டாப் பாக்ஸ்களை பெறாவிட்டால் உரிமம் ரத்து : ஆட்சியர் சஜன்சிங்சவான் அறிவிப்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 7:12:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் கேபிள்ஆப்ரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கான செட்டாப் பாக்ஸ்களை பெறாவிட்டால் எல்சிஓ உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர்சந்திப்நந்துாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, மாவட்டத்தின் அனைத்து பகுதி களுக்கும் செட்டாப் பாக்ஸ்கள் உள்ளுர் கேபிள் ஆப்பரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு வழங்க ப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

பொது மக்கள் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை பெற தங்கள் பகுதியிலுள்ள அரசு ஆப்பரேட்டரை அனுகி ஆதார் நகல், முகவரி இருப்பிட சான்று நகல் மின் கட்டண இரசீது நகல் அல்லது குடும்ப அட்டை நகல் கொடுத்து அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பொருத்திக்கொள்ள செயலாக்க கட்டணமாக ரூ.200 ( ரூபாய் இருநூறு) ஒரு முறை மட்டும் பெற்றுக் கொள்ளவதற்கு ஆப்பரேட்டர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மாதச்சந்தா தொகையாக ரூ.125+ ஜிஎஸ்டி (200 சேனல்கள்) மற்றும் ரூ.175+ ஜிஎஸ்டி (300 சேனல்கள்) நடைமுறையில் உள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ளுர் கேபிள் ஆப்பரேட்டர்களாக பதிவு செய்துள்ள ஆப்பரேட்டர்கள் இம்மாத இறுதிக்குள் (30.11.2017) தங்களின் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கான செட்டாப் பாக்ஸ்களை பெற்று தங்களு க்கான அரசு கேபிள் சேவையை தரம் உயர்த்துமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறீர்கள் 

தவறும் பட்சத்தில் தங்கள் பகுதிக்கு வழங்கப்பட்ட எல்சிஓ உரிமம் ரத்து செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இந்நி றுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 மற்றும் 04652-235456 ஆகிய தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory