» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே லாரியிலிருந்து பேட்டரி திருட்டு : மர்ம நபர்க்கு வலை

செவ்வாய் 14, நவம்பர் 2017 6:31:15 PM (IST)

தக்கலை அருகே லாரியிலிருந்து பேட்டரி திருடியமர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தக்கலை அருகே உள்ள சாமியார்மடம் கல்நாட்டுவிளையை சேர்ந்த செந்தில்ராஜன் (34). இவர் சொந்த மாக லாரிவைத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது லாரியை புலிப்பனம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் லாரியை பார்த்த போது இரண்டு பேட்டரிகள் திருடப்பட் டிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ 13 ஆயிரம் ஆகும். இது குறித்து அவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து செய்து பேட்டரியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory