» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அஞ்சுகிராமத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர்க்கு வலை

செவ்வாய் 14, நவம்பர் 2017 6:19:39 PM (IST)

அஞ்சுகிராமத்தில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையை சேர்ந்தர் வில் சன். இவரது மனைவி புஷ்பராணி (36). இவர்களது உறவினர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் மகன் பெலிக்ஸ் (23) என்பவர் சம்பவத் தன்று வில்சன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு புஷ்பராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெலிக்ஸ் வீட்டில் இருந்த குத்துவி ளக்கை எடுத்து புஷ்பராணியை தாக்கினாராம் .

இதில் காயமடைந்த புஷ்பராணி கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory