» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலீசார் கைப்பற்றிய பைக்,கார்கள் நாளை ஏலம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 5:49:11 PM (IST)

குமரியில் போலீசார் கைப்பற்றிய பைக்குகள், கார்கள் நாளை ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட எல்கைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் இருந்து 2017ம் ஆண்டு உரிமை கோரப்ப டாத 149 பைக் மற்றும் நான்கு சக் கர வாகனங் கள் கைப்பற்றப் பட்டு,வழக்கு பதிந்து அந்தந்த வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து விபரம் அர சிதழிலிலும் வெளியிடப்பட்டது. இந்த வாக னம் குறித்து, இது வரை எந்த நபரும் உரிமை கோரி வராத தால், இந்த வாக னம் அனைத்தும் அரசுடமை யாக்கப்பட்டு, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் ஏலம் நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடக்கிறது. ஏலம் கேட்க விரும்புபவர்கள், ரூ.3 ஆயிரம் வைப்பு தொகை , டிடி  அல்லது பணமாக செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.பொது ஏலம் எடுக்க விரும்புகிறவர்கள், வாகனங் களை பார்வை யிட அனுமதிக்கப்படுவார்கள். இது தவிர மேலும் , 13 டன் எடை கொண்ட இரும்பு தூண்களுமங ஏலம் விடப்படவுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory