» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலைகளை சீரமைக்கக தேமுதிக உண்ணாவிரதம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:00:58 AM (IST)

மார்த்தாண்டம் அருகே சாலைகளை சீரமைக்கக் கோரி தேமுதிக சார்பில், ஞாறான்விளை சந்திப்பில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கழுவன்திட்டை சந்திப்பு முதல் ஞாறான்விளை செல்லும் சாலை, திக்குறிச்சி - பயணம் சாலை,  ஆலுவிளை நியாயவிலைக்கடை சந்திப்பிலிருந்து பேரை வழி வெலிக்கல் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு குமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.  மேல்புறம் ஒன்றியச் செயலர் சுஜித்பாபு,  பாகோடு பேரூர் செயலர்  சுரேஷ்குமார்,  பேரூர் அவைத் தலைவர் கே. வில்சன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory