» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளையில் இரண்டாம்கட்ட மனுநீதி நாள் முகாம் : நாளை நடக்கிறது

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:21:51 AM (IST)

தோவாளையில் இரண்டாம்கட்ட மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை (நவ.15)  நடைபெறுகிறது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,தோவாளை வருவாய் கிராமத்துக்கான,  மனுநீதித் திட்ட (இரண்டாம் கட்டம்)  நிறைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ.15) காலை 11 மணிக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.  

முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ தலைமை வகிக்கிறார். இதில் அக். 19 ஆம் தேதி  நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள்  சம்பந்தப்பட்ட  துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.  

மேலும்,  இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத்திட்ட விவரங்களும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும்.எனவே,  தோவாளை ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள்  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory