» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் பள்ளத்தில் பாய்ந்ததில் வாலிபர் பரிதாப சாவு

திங்கள் 13, நவம்பர் 2017 6:23:27 PM (IST)

நித்திரவிளை அருகே பைக் பள்ளத்தில் பாய்ந்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான அயிரையை சேர்ந்த பிரதீப்குமார்(26). நேற்று மாலை மனைவி வீட்டுக்கு வந்த பிரதீப்குமார் பின்னர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கிராத்தூர் அருகே எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட சாலையோரமாக பைக்கை ஒதுக்கினாராம். அப்போது எதிர்பாராவிதமாக பைக் பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் கீழே விழுந்த பிரதீப்குமார் பலத்த காயம் அடைந்தார். 

தாெடர்ந்து அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நித்திர விளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory