» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷிய பயணம்: அதிபர் புதினுடன் சந்திப்பு!

புதன் 11, டிசம்பர் 2024 11:17:53 AM (IST)



ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா-ரஷியா ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்துக்கு பின் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது ராஜ்நாத்சிங் "நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் இது தொடரும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory