» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:02:50 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான விவேக் ராமசாமி, தமிழில் உரையாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி(37) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள விவேக் ராமசாமி பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தலுக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.இந்த நிலையில், பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் விவேக் ராமசாமி பங்கேற்று இருந்தார். அப்போது விவேக் ராமசாமியிடம் பேசிய தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒருவர், "அடுத்த அதிபராக உங்களை பார்க்க விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள். எனது பெற்றோரும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
உடனடியாக "நானும் தமிழ் பேசுவேன், பாலக்காடு தமிழ்” என்று தமிழில் சிரித்தபடி அவர் பதிலளித்தார். விவேக் ராமசாமியின் ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொலி வைரலாகி வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
