» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனாவைவிட கொடூர வைரஸ் வைரஸ் பரவும் அபாயம்: சீன வைராலஜிஸ்ட் எச்சரிக்கை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 4:11:06 PM (IST)
எதிர்காலத்தில், கரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் அபாயமிருப்பதாக சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எச்சரித்துள்ளார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் பற்றிய ஆய்வின் மூலம் புகழ்பெற்றவர் ஷி ஸெங்லி. ஆங்கில திரைப்படத்தின் பேட் உமன் என்ற பெயரால் இவர் அறியப்படுகிறார். ஒட்டுமொத்த உலகமும், கரோனாவை விட அதிக அபாயம் நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்தின், உருவெடுக்கும் தோற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இவர் உள்ளார். இவர் கரோன தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.இவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், 40 வகையான கரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவிருப்பதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டவை மிகவும் அபாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பயங்கர நிகழ்வுகள் தாக்கக் கூடும் என்றும் உலகத்தை இந்த ஆய்வுக் கட்டுரை எச்சரித்துள்ளது.அதிகரிக்கும் வைரஸ்கள், மக்கள் தொகை, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இதுபோன்ற ஆய்வுகளுக்காக, வூஹான் ஆய்வுக்கூடம், மிக மோசமான வைரஸ்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதாகவும், அமெரிக்கா அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஃபெடரல் அமைப்பு திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
