» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நைஜீரியாவில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி
செவ்வாய் 6, ஜூன் 2023 11:40:56 AM (IST)
நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அதன்படி வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
