» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கான் பள்ளியில் மாணவிகளுக்கு விஷம்: 80பேர் மருத்துவமனையில் அனுமதி!!
திங்கள் 5, ஜூன் 2023 12:20:25 PM (IST)
ஆப்கானில் பள்ளிகளில் விஷம் வைத்ததில் 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.
இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார். கல்வி துறை விசாரணையை தொடங்கி நடத்தி உள்ளது. இதில், 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார். எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)


.gif)
இது தான்Mar 13, 1686 - 08:30:00 PM | Posted IP 162.1*****