» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்... காரணம் என்ன?

வெள்ளி 7, ஏப்ரல் 2023 10:50:26 AM (IST)



பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். 

ஆனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பி வந்தனர். இதனையடுத்து பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார். இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர். இதனால் அந்த நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர்கள் தங்களது மின்சார வாகனத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory