» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயர் வெளியிட்டது சீனா: இந்தியா கண்டனம்!

செவ்வாய் 4, ஏப்ரல் 2023 3:59:22 PM (IST)

அருணாச்சலப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு புதிய பெயரிட்டு வரைபடம் வெளியிட்ட சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த மாநாட்டின் கூட்டத்தில் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவினால் உரிமை கோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது.

சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்த பெயர்களை வெளியிட்டது. இது மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவின் அமைச்சரவை இதனை வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது குறித்து கூறுகையில், அத்தகைய அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்குவது களத்தில் உள்ள நிலைமையை மாற்றாது.அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இப்போதும் அது தொடரும்" என்று தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து

சாமிApr 4, 2023 - 10:26:04 PM | Posted IP 162.1*****

56 இன்ச் பயில்வான் ஏன் இதுவரை இதைப்பற்றி வாயே திறக்கவில்லை ,...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory